Daughter killed her mother

Advertisment

தஞ்சை மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கும் திருவள்ளுர் மாவட்டம் ஆஞ்சநேயபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேவிபிரியா என்பவருக்கும் முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆஞ்சநேயபுரத்தில் தேவிபிரியாவின் தாய் பானுமதி வீட்டில் இருந்துள்ளார். தேவிபிரிவியாவின் சகோதரி சாமூண்டீஸ்வரி இருந்துள்ளார். ஏற்கனவே முகநூலில் நட்பாக இருக்கக்கூடிய சதீஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தேவிபிரியாவை அழைத்துச் செல்ல வந்துள்ளனர்.

அந்த நேரத்தில் தேவிபிரியாவுக்கும் பானுமதிக்கும் வாக்குவாதம் நடந்தது. அது கைகலப்பாக மாறியது. இதில் தேவிபிரியா தனது தாய் பானுமதியை கத்தியால் நான்கு இடத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பானுமதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

இந்த சம்பவத்தையடுத்து தேவிபிரியா கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் வழிதெரியாமல் சதீஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் ஓடியபோது, அந்தப் பகுதியினர் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இவர்கள் 3 பேரையும் விசாரணை நடத்திய போலீசார், காதலன் வினோத்தை தேடி வந்தனர். விசாரணையில் வினோத்தையும் போலீசார் கைது செய்துள்ளனர்.