Daughter - Father who incident his son and lost their life

திருவெற்றியூர் காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் அருள் - அம்சா(42) தம்பதியினர். அருள் தையல்காரராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியின் மூத்த மகள் ரம்யா அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். மகன் ராஜேஷ் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Advertisment

இந்த நிலையில் முடக்குவாதத்தால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அம்சா சிகிச்சை பலனின்றி கடந்த 3 ஆம் தேதி உயிரிழந்தார். அம்சாவின் இறப்பு கணவர் அருள், பிள்ளைகள் ரம்யா, ராஜேஷை வெகுவாக பாதித்துள்ளது. உறவினர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இந்த நேரத்தில் ரம்யாவின் பாட்டி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்ததால், நீண்ட நேரம் தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் யாரும் கதவைத் திறக்காததால், சந்தேகமடைந்த பாட்டி அருகே உள்ள ஒருவரின் உதவியுடன் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

Advertisment

அப்போது விட்டில் உள்ள ஒரு அறையில் அருள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் பக்கத்தில் ரம்யாவும் அவரது சகோதரர் ராஜேஷும் மயங்கிய நிலையில் கிடைந்ததனர். இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவி அம்சா உயிரிழந்த துக்கம் தாளாமல் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு அருள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. முதலில் பிள்ளைகளுக்கு மயக்கமருந்து கொடுத்து, பின்பு அவர்களின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு பின்னர் அவர் மனைவியின் புடவையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisment

இருப்பினும் பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்தபிறகு இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.