Daughter and  18 year old boy friend caught in her father case

மது போதையில் தகராறு செய்து வந்த தந்தையை மகள், ஆண் நண்பருடன் சேர்ந்து கூலி படையை ஏவி திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

குமரி மாவட்டம், குளச்சல் செம்பொன்விளையைச் சேர்ந்தவர் குமார் சங்கா் (52). எலக்ட்ரீக்கல் வேலை செய்து வந்த இவர், ரீத்தாபுரம் திமுக கிளை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர், தனது மனைவி, மற்றும் இரண்டு மகள்களுடன் செம்பொன்விளையில் வசித்துவந்தார். எம்.ஏ., எம்.எட். படித்துள்ள இவரது 26 வயது மூத்த மகள், திக்கணங்கோட்டில் தட்டச்சும் பயின்று வருகிறார்.

Advertisment

கடந்த 6-ம் தேதி இரவு குமார் சங்கரை வீட்டின் அருகில் மர்ம நபர்கள் இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்குச் சென்ற குமார் சங்கரின் மனைவி மற்றும் மகள்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து குமார் சங்கர் இறந்ததை கண்டு கதறி அழுதனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குளச்சல் ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

அதேசமயம் தனிப்படையினர், குமார் சங்கர் மற்றும் அவரின் வீட்டில் உள்ளவர்களின் செல்போன்களை சோதனை செய்தனர். அதில் 26 வயதான மூத்த மகள், 18 வயது நிரம்பிய நர்சிங் கல்லூரி மாணவருடன் அதிகம் பேசிவந்தது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் இருவரிடமும் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள்தான் அந்த கொலையை செய்துள்ளனர் என்பது உறுதியானது. அதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இதுக்குறித்து தனிப்படை ஆய்வாளர் அருள் பிரகாஷ் கூறியதாவது; ‘கொலைச் செய்யப்பட்ட குமார் சங்கர் குடிப்பழக்கம் உள்ளவர். அவர் குடித்துவிட்டு மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தினமும் தகராறு செய்வந்திருக்கிறார். அதை தாங்கி கொள்ள முடியாத மூத்த மகள், தட்டச்சு படிக்கச் சென்ற இடத்தில் பழக்கமாகி நண்பரான நர்சிங் மாணவரிடம் அதனைக் கூறியுள்ளார். அதேபோல், தந்தையை கொலைச்செய்யவும் மகள் முடிவு எடுத்துள்ளார்.

நர்சிங் மாணவன், திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமுகுந்தன் மூலம் கொலை செய்ய முடிவு செய்தார். அதையடுத்து இருவரும் முகுந்தனை தொடர்பு கொண்டு கொலைக்கு 60 ஆயிரம் ரூபாய் ரேட் பேசி, 10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். அப்படிதான், சம்பவதன்று இரவு வீட்டில் இருந்த குமார் சங்கரை ஸ்ரீமுகுந்தன் வெளியே அழைத்து வந்து பின்னர் அந்த மாணவனுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலைச்செய்துவிட்டு தலைமறைவானார்கள். பின்னர் உவரியில் பதுங்கியிருந்த ஸ்ரீமுகுந்தனையும், குளச்சலில் இருந்த குமார் சங்கரின் மூத்த மகள் மற்றும் நர்சிங் மாணவனையும் கைது செய்துள்ளோம்.’ இவ்வாறு அவர் கூறினார்.