திருச்சி ஏர்போர்ட்டில் மேலாளராக பணியாற்றி வரும் அர்ஜித் சௌத்ரி என்பவரது மகள் அவில்ஷா(13). திருச்சி மவுண்ட் லிட்ராஸீ பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், வீட்டில் இருக்கும்போது செல்போனில் கேம் விளையாடிய வண்ணம் இருந்துள்ளார்.
இதனால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதனால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கே.கே.நகர் போலீசார், மாணவி கோபித்துக்கொண்டு வெளியில் சென்று விட்டாரா? அல்லது ஏர்போர்ட் மேலாளரின் குழந்தையை யாரேனும் கடத்தி விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.