‘நான் முதல்வன்’ மதிப்பீட்டுத் தேர்வு முடிவுக்கான தேதி அறிவிப்பு

Date Notification for 'Naan Muthalvan Assessment Exam Result

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும்சிறப்புத் திட்டச்செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. போட்டித் தேர்வுப் பிரிவு, தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சித் திட்டங்களைத்தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 2023 - 24-க்கான தமிழக அரசின் பட்ஜெட் உரையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ்ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 7,500 ரூபாய்பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த ஊக்கத் தொகைக்காக 1000 மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுக் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இதனையடுத்து நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வைத்தமிழகம் முழுவதிலும் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதி இருந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 22 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 27 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத்தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நான் முதல்வன் திட்டப் போட்டித் தேர்வுகள் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

exam upsc
இதையும் படியுங்கள்
Subscribe