காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Date Notification for Cauvery Management Commission Meeting

கடந்த ஜனவரி 18 ஆம் நடந்த ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாதத்தில் வினாடிக்கு ஆயிரத்து 182 கன அடி வீதம் 2.76 டிம்சி தண்ணீரும், பிப்ரவரி மாதத்திற்கு 998 கன அடி வீதம் மொத்தமாக 5.26 டிஎம்சி நீர்கார்நாடக அரசின்சார்பில் திறக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடந்த கூட்டத்திற்குப் பிறகு வரும் 1 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

cauvery Delhi karnataka Kerala Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe