/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a5_21.jpg)
நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி வளர்ச்சி தொடர்பாக நவம்பர் ஒன்றாம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடைபெற இருந்தது. ஏற்கனவே இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக சிக்கல் காரணமாக வரும் 23ஆம் தேதிக்கு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநருக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் 23ஆம் தேதி காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். அதில் மக்கள் பங்கேற்பதற்க ஏதுவாக கிராம சபை கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு முறையாக தெரியப்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டம் தொடர்பான அறிக்கையை 23ஆம் தேதி ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)