Skip to main content

அமித்ஷா தமிழகம் வரும் தேதி மாற்றம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு  9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் மத்திய அரசும், பாஜகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. மேலும் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த மே  மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் விளக்க பொதுக் கூட்டங்களை நடத்த பாஜக முடிவெடுத்துள்ளது. இதையடுத்து பல்வேறு ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலூரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் 8ம் தேதி நடக்க உள்ளதாகவும் இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார் என்றும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த தேதி திடீரென மாற்றப்பட்டு 8 ஆம் தேதிக்கு பதிலாக 11 ஆம் தேதி அமித்ஷா தமிழக வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திடீரென தீப்பிடித்து எரிந்த பைக்; உயிர் தப்பிய வாலிபர்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
bike suddenly caught fire in Vellore

வேலூர் அணைக்கட்டிற்கு அருகே உள்ள சின்னஊனை கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான புருஷோத்தமன். இவர் காட்பாடி விருதம்பட்டில் மாரியம்மன் கோவில் அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென டூ வீலர்  தீ பிடித்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த புருஷோத்தமன் டூவீலரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. வாகனம் முழுவதும் தீ பற்றி எரிய துவங்கியது. அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்தும் டூவீலர் முழுவதுமாக எரிந்தது. இதுக்குறித்து விருதம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

இரண்டு மாநில காவலருக்கு விபூதி அடித்த கும்பல்; சுற்றிவளைத்த தமிழக போலீஸ்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
gang was arrested for smuggling cannabis from Odisha to Vellore

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திரா எல்லைப்பகுதியான உள்ளிப்புதூர் அருகே வேலூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வாகன சோனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இரண்டு இருச்சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 4 இளைஞர்களை மடக்கி சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து.

அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருச்சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து அவர்களிடம் தொடந்து விசாரணை செய்தனர். அதில், நான்கு இளைஞர்களும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்காவைச் சேர்ந்த விஜய்(23) ரிஷிகுமார்(20), நெடுஞ்செழியன்(23) விக்னேஷ்(25) ஆகியோர் என்பதும், அவர்கள் 10 கிலோ கஞ்சாவை ஒடிசா மாநிலம் அனாங்காப்பள்ளி பகுதியில் இருந்து இரயில் மூலம் ஆந்திரா மாநிலம் சித்தூர் வரை கடத்திவந்து, அங்கிருந்து இரண்டு இருச்சக்கர வாகனத்தில் வேலூருக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. 

இளைஞர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.