Advertisment

பிளாஸ்டிக் பொருட்களுக்கு 1-ம் தேதியில் இருந்து "குட் பை"

28 ஆண்டுகளுக்கு முன் பிளாஸ்டிக் பைகளோ அதன் பயன்பாடுகளையோ பற்றி அவ்வளவு அறிந்திருக்காத காலம். அப்போதெல்லாம் ரேசன் கடைகளானாலும் சாி, பெட்டி கடைகளானாலும் சாி துணி பை அல்லது பழைய பேப்பா்களில் தான் பொருட்களை வாங்கி வந்தனா். துணிக்கடைகளில் கூட துணிப்பைகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

Advertisment

plastic

அதன்பிறகு தான் பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தியும் பயன்பாடுகளும் தலை காட்ட தொடங்கியது. தொடா்ந்து எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக் என்ற நிலை உருவானது. கடைகளில் எல்லாம் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கபபட்ட பொருட்களாகவே மாறியது. துடைப்பதில் இருந்து சாப்பாடு சாப்பிடுவது கூட பிளாஸ்டிக்கில் மாறியது. இதனால் பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்பவா்கள் கூட பை எதுவும் எடுத்து செல்லாமல் கைவீசி தான் சென்றனா். அதே போல் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடிய ஃபைல்கள் கூட பிளாஸ்டிக்கா மாறியது.

Advertisment

plastic

இப்படி மக்கள் பயன்பாட்டோடு ஒன்றியிருந்த பிளாஸ்டிக்கை மக்கள் பயன்படுத்தி விட்டு அதை நிலத்தில் கண்ட கண்ட இடங்களில் தூக்கி எறியும் போது அந்த பிளாஸ்டிக் மக்கி மண்ணோடு மண்ணாகாமல் உயிா் பெற்று கிடக்கிறது. இது சுற்றுபுறச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறியது. நிலத்தடி நீருக்கு எமனாக மாறியதோடு மழைநீரை தாங்கி பிடித்து மண்ணோடு மண் கலப்பதை தடுக்கிறது. இந்த பிளாஸ்டிக் உள்ளூா் மட்டுமல்ல உலகம் முமுவதும் அச்சுறுத்தலை உண்டாக்கியது.

இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற ஜனவாி 1-ம் தேதி புத்தாண்டு நாளில் இருந்துபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அரசு அறிவித்து அதற்கான அறிவிப்பணையையும் வெளியிட்டது. அதன்படி பிளாஸ்டிக் பயன்பாடு மக்களிடமிருந்து விடை பெறுவதற்கு இன்னும் சில நாட்களே தான் உள்ளன. இதற்கு பொது மக்களும் பிளாஸ்டிக் உற்பத்தியாளா்களும் முமு ஒத்துழைப்பு தரும்படி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் இதற்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் கடும் எதிா்ப்பு தொிவித்துள்ளனா்.

plastic

இதில் தற்போது மக்கும் பிளாஸ்டிக்கில் வரும் பால், தயிா், எண்ணெய் பொருட்கள், மருத்துவ பொருட்கள் பயன்பாட்டில் இருக்கும் அதே வேளையில் மக்காத பிளாஸ்டிக் முமுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு துறைகளில் கூட சணல் கொண்டு தயாாிக்கப்பட்ட ஃபைல்கள் தான் 1-ம் தேதியில் இருந்து புழக்கத்திற்கு வருகிறது.

இதனால் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகம் "குட்பை" சொல்கிறது.

green flag enviroinment plastic waste Plastic
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe