Skip to main content

தர்பார் தயாரிப்பாளருக்கு டாக்டர் பட்டம்! 

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

 

 

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. இவரது சமூக சேவையை பாராட்டி,  மலேசியாவில் உள்ள, புகழ் பெற்ற  ஏம்ய்ஸ்ட் பல்கலைக் கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. 

 

Lyca Productions



லைக்கா மொபைல் நிறுவனம், ஐரோப்பாவில் இயங்கும் பல தொலைபேசி நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ்கரன், மக்களின் பயன்பாட்டுற்கான பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அவரது சேவை பல்வேறு நாடுகளின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. 


 


இலங்கையின் வட கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்களுக்கு குடியிருக்க நூற்றுக்கணக்கான வீடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடி நீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பது என எண்ணிலடங்காத சமூக சேவைகளை செய்து வருகிறார்,  சுபாஷ்கரன். அவருடைய சமூக சேவையை பாராட்டி, மலேசிய ஏம்ய்ஸ்ட் பல்கலைக் கழகம் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. பட்டமளிப்பு விழாவில் பேசிய மலேசிய துணை முதல்வர், சுபாஷ்கரனை பார்த்து வியப்பதாக தெரிவித்துள்ளார். 


 

இந்திய சினிமா துறையிலும் லைக்கா நிறுவனம் கால்பதித்து, பல ஆண்டுகளாகிறது. தென்னிந்தியாவில் பல படங்களை தயாரித்து வருகிறது.  ரஜினி நடிப்பில் உருவான 2.0, விரைவில் வெளிவர உள்ள ரஜினியின் தர்பார் உள்பட பல படங்களை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஷாலுக்கு அவகாசம் கொடுத்த நீதிமன்றம்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டதாகவும், அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர்நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். 

இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையில், இருவருக்கும் இடையிலான பண பரிவர்த்தனை செய்தது குறித்து ஆய்வு செய்வதற்காக ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து மூன்று ஆண்டுக்கான வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் சில கடிதங்களை கேட்டு தங்களது ஆடிட்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்த கடிதம் தற்போது தான் கிடைத்திருப்பதால் அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

“அவதூறு பரப்புகின்றனர், பட வாய்ப்புகளை தடுக்கின்றனர்” - விஷால் குற்றச்சாட்டு

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டதாகவும், அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனை திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர் நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பு, கடனை திரும்ப செலுத்தவில்லை என விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது. விஷாலுக்கான பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது. லைகா நிறுவனத்தை தவிர வேற எந்த நிறுவனத்திடமும் கடன் நிலுவையில் இல்லை. விஷாலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே நடந்த பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக கணக்கு தணிக்கையாளரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து விஷால் தரப்பு கோரிக்கை குறித்து லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அடுத்த விசாரணையை வருகிற 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.