"கூடிய விரைவில் எனக்கு திருமணம்" தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யோகி பாபு பேச்சு.

Advertisment

சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167- வது படமாக உருவாகியுள்ள, இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

darbar film audio launch actor yogi babu interest speech

விழாவில் பேசிய நடிகர் யோகி பாபு, நான்கு ரூபாய் பாட்ஷா படத்தை போய் பார்த்ததில் நானும் ஒருவன்; தற்போது அவருடனேயே நடித்தால் எப்படி இருக்கும்? என்றார்.

Advertisment

darbar film audio launch actor yogi babu interest speech

இதனிடையே பேசிய சண்டைப்பயிற்சியாளர்கள், ராம்- லக்ஷ்மன், 'தர்பார்' சண்டைக்காட்சியில் ஒரு ஷாட்டில் கூட டூப் இல்லாமல் ரஜினி நடித்தார். 24 மணி நேரமும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ரஜினி"என்றார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யா இறுதியாக யோகிபாபுவிடம், உங்களுக்கு எப்போ திருமணம் என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதிலளித்தவர், “நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும், எனக்கு கல்யாணம் நடக்காதது தான் பிரச்சனையா? கூடிய விரைவில் எனக்கு திருமணம் நடந்து விடும். உனக்கு தை மாதம் கல்யாணம் நடக்கும் நான் வருகிறேன் என ரஜினி சார் என்னிடம் சொன்னார்” என்று கூறுவார்.