Skip to main content

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அபாயகரமான மொபைல் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் !

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

கூகுள் பிளே ஸ்டோரில் "Google Play Store" தேவையற்ற மொபைல் செயலிகள் (Android Mobile Apps) நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளைஞர்களின் பாதை தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறது என பெற்றோர்கள் உட்பட பலர் வேதனை தெரிவித்துள்ளனர். 

 

google app



இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் அபாயகரமாக உள்ள 200 மொபைல் செயலிகள் ( 200 Mobile Android Apps Deleted by Google ) நீக்கியதாக கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கூகுள் பிளே ஸ்டோரில் GAMING APPs , PHOTO EDITOR APPs அதிக அளவில் பிளே ஸ்டோரில் நீக்கப்பட்டதாக கூகுள் "Google" நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எந்தெந்த மொபைல் செயலிகள் நீக்கப்பட்டது என்பது குறித்து மொபைல் செயலிகளின் சில பெயரை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதை பின்வருமாறு 
1. Phone Finder.
2. Dual Screen Browser.
3. Face Beauty Makeup.
4. Deleted Files Recovery.
5. Broken Screen - Cracked Screen.
6. Modi Photo Frame.
7. Anti Theft & Full Battery Alarm.
8. Voice Reading For SMS. Whatsapp & Text SMS.
9. Move App TO SD Card.
10. Live Translator.
11. Flash Alart - Flash on Call.
12. Foodball Results & Stats Analyzer.
13. DSLR CAMERA BLUR.
14. Recover Deleted Pictures.
15. Anti-Spam calls.
16. Professional Recorder.

இது போன்ற தேவையற்ற மொபைல் செயலிகளை ( Android Mobile Apps) கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. இதனால் கூகுள் பிளே ஸ்டோரில் ஆக்கப்பூர்வமான மக்களுக்கு தேவையான செயலியை இணைக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

மேலும தேவையற்ற மொபைல் செயலியை கூகுள் நிறுவனம் நீக்கியதன் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கால நலன் காக்கப்படும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனிடையே கூகுள் நிறுவனத்தின் இத்தகைய முடிவை அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு தந்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Google CEO Sundar Pichai gave a shocking announcement to the employees!

உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார். 

இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து,  கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார். 

கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை அடைய பொறுப்புடன் செயல்படுவோம் - முதல்வர்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
We will act responsibly to achieve the goal of Accident Free Tamil Nadu CM

இந்தியாவில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை ‘தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்’ அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலைப் பாதுகாப்பு மாதம் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சாலை விபத்துகளால் ஏற்படும் கொடுங்காயங்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்கும் பொருட்டு, சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மிகமிக அவசியமானதாகிறது. சாலையை உபயோகிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நம் அனைவரின் கடமையாகும். நமது நாட்டில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை ‘தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்’ அனுசரிக்கப்படுகிறது.

சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு அரசின் ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை அடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2023-2024ஆம் ஆண்டிற்கு, சாலைப் பாதுகாப்பிற்காக அரசு 135 கோடியே 84 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அடிக்கடி விபத்து நிகழும் பகுதிகளைக் கண்டறிந்து மேம்படுத்தவும், நவீன சமிக்ஞை விளக்குகள், சாலைக் கட்டமைப்புகள் மற்றும் சாலைத் தடுப்பான்களை நிறுவுவதற்காகவும் செலவிடப்பட்டு வருகிறது.

சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றத் தவறுவதால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. தனி மனித நடத்தை, ஓட்டுநரின் உளவியல் நிலை, பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, சாலையின் அமைப்பு, சுற்றுப்புறச்சூழல் போன்றவைகளே சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணிகள் என பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், தற்போதைய மற்றும் வருங்கால சாலை உபயோகிப்பவர்களிடையே பாதுகாப்பான சாலைப் பயனாளர் நடத்தையை ஊக்குவிப்பதற்காக சாலைப் பயனாளர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை வழங்குவது அரசின் முக்கிய நோக்கமாகும். 

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம் : நம்மைக் காக்கும் 48’ என்ற சீர்மிகு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதோடு பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றவகையில், சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உடனடி விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளில் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்த சாலைப்பாதுகாப்பு மாதத்தில், அரசானது வாகனத்தை இயக்கிவரும் ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகள் ஆகியவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளது. உயிர் வாழ்வதற்கான மற்ற அடிப்படைத் திறன்களை போல சாலைப் பாதுகாப்புக் கல்வியும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம். சாலை விதிகளை மதித்தால், விபத்தில்லா பயணம் சாத்தியமே; விதிகளை மதிப்போம், வேதனைகளைத் தவிர்ப்போம்; சாலைப் பாதுகாப்பு நம் உயிர் பாதுகாப்பு” எனத் தெரிவித்துள்ளார்.