Skip to main content

ஆண்களுக்கு ஆபத்தா ? - அச்சத்தில் விளக்கு ஏற்றும் பெண்கள்!

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 14ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நவம்பர் 23ந்தேதி மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அந்த தீபம் வரும் டிசம்பர் 5ந்தேதி வரை எரியும் என அறிவித்துள்ளது கோயில் நிர்வாகம்.

 

 Women who lamp light in fear

 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் ஒரு தகவல் பரவியது. அதாவது திருவண்ணாமலை மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம் அணைந்துவிட்டது. இதனால் வீட்டில் உள்ள ஆண்களுக்கு ஆபத்து, ஆபத்தை தவிர்க்க வேண்டும்மென்றால் வீட்டில் எத்தனை ஆண்கள் உள்ளார்களோ அத்தனை அகல் விளக்குள் வீட்டுக்கு வெளியே வரிசையாக ஏற்றிவைத்து வணங்க வேண்டும் என்பதே அந்த தகவல்.

 

 Women who lamp light in fear

 

இந்த தகவல் காட்டு தீயை விட வேகமாக பரவியது. இதனால் பயந்துப்போன ஆன்மீகத்தின் மீது அதீத நாட்டம் கொண்ட மகளிர் மற்றும் ஆண்கள், இது உண்மையா என ஆராயாமல் ஒருவருக்கொருவர் தகவலை பரிமாரிக்கொண்டு வீட்டுக்கு வெளியே அகல் விளக்கு ஏற்றிவைத்து வணங்குவதோடு, தங்களது உறவினர்களுக்கும் இந்த தகவலை சொல்லி விளக்கு ஏற்றவைத்துள்ளனர்.

 

 Women who lamp light in fear

 

உண்மையில் மலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் அணைந்ததா ?.

 

மகாதீபத்தன்று, 2660 அடி உயரம்முள்ள திருவண்ணாமலை மலை உச்சிக்கு நாட்டார் சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினர் பாரம்பரியமாக 51/2 அடி உயரமும், 3 அடி அகலமுள்ள தீப கொப்பறையை மலை உச்சிக்கு கொண்டு சென்று காடா துணியை நெய்யில் ஊறப்போட்டு, மேலும் லிட்டர் கணக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுவார்கள். தீபம் அணையாமல் இருக்க சிலர் மலை உச்சியிலேயே இருப்பர். மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் விடியற்காலை 6 மணிக்கு அணைக்கப்படும், கோயிலில் இருந்து நெய் எடுத்துச்சென்று கொப்பறையை சுத்தம் செய்து மாலை 6 மணிக்கு மீண்டும் தீபம் ஏற்றுவார்கள். ஒவ்வொரு வருடமும் 11 நாள் மலை உச்சியில் தீபம் எரியும். இதுதான் வழக்கம். இந்த ஆண்டு தீபம் அணையவில்லை, இந்த ஆண்டு மட்டும்மல்ல எப்போதும் தீபம் அணையாது, அணையாதபடி பார்த்துக்கொள்வார்கள். பகலில் யாராவது மலை உச்சியை பார்த்து தீபம் தெரியாதவர்கள் கிளப்பிவிட்ட வதந்தி இது என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்