பிறந்த நாளில் 10 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை; டான்சர் ரமேஷ் உயிரிழப்பு

The dancer in Thunivu jumped from the 10th floor; passed away

அஜித்தின் துணிவு படத்தில் நடனமாடியிருந்தடான்சர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர்களைப் போல் நடனமாடி மக்களைக் கவர்ந்தவர் டான்சர் ரமேஷ். இவர் மூர் மார்க்கெட் பகுதியில் தனது இரண்டாவதுமனைவியுடன் வசித்து வந்தார். இவரது முதல் மனைவியின் வீடு புளியந்தோப்பு கே.பி.பார்க் அருகே தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் கட்டடத்தில் உள்ளது.

இன்று ரமேஷுக்கு பிறந்த நாள் என்பதால் தனது முதல் மனைவியை சந்திக்கச் சென்றுள்ளார். 10 மாடிகள் கொண்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியிலிருந்து இன்று மாலை ரமேஷ் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரமேஷ் சமூக வலைத்தளம் தவிர தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர். இவரதுதற்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஜெயிலர் திரைப்படத்தின் பாடலொன்றில்ரஜினியுடன்ரமேஷ் நடனமாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

instagram
இதையும் படியுங்கள்
Subscribe