Skip to main content

விநாயகர் ஊர்வலத்தில் ஹிஜாப் அணிந்து நடனம்; கைது செய்த போலீஸ்

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

Dance wearing hijab in Ganesha procession; Arrested police

 

தமிழ்நாடு முழுக்க கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபட்டனர். மேலும், பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாகவும் எடுத்துச் சென்றனர். அதன்படி வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூர் கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. 

 

பிறகு அந்த விநாயகர் ஊர்வலமாக கடந்த 21ம் தேதி எடுத்து செல்லப்பட்டது. அப்போது இளைஞர்கள் பலரும் நடனமாடியபடி அந்த ஊர்வலத்தை நடத்தினர். இதில் ஒரு இளைஞர் ஹிஜாப் அணிந்தபடி அந்த ஊர்வலத்தில் நடனமாடினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. 

 

அதனைத் தொடர்ந்து கழிஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர், கழிஞ்சூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார், வேறு மத நம்பிக்கைகளை கேலி செய்ததன் காரணமாக  ஹிஜாப் அணிந்து நடனமாடிய இளைஞர் அருண்குமார் என்பவரை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்