Advertisment

கபாலீஸ்வரர் கோவிலில் சினிமா பாடலுக்கு நடனம்; போலீசில் புகார்

Dance to movie song in Kapaleeswarar Temple; Complain to the police

Advertisment

சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் திரைப்பட பாடலுக்கு நடனமாடி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் சிலர் பதிவு செய்த நிலையில் அது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலில் நடனமாடி வீடியோ எடுத்து பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் கிரைம் போலீசில் கோயில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது. சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட காணொலி மற்றும் பதிவிட்டவரின் பக்கத்தை முடக்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் அந்த புகாரில் தெரிவித்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் கபாலீஸ்வரர் கோயிலில் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கபாலீஸ்வரர் கோவில் வளாகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வீடியோ பதிவு பக்தர்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

temple Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe