புதுச்சேரி கடற்கரையோரம் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த சனிக்கிழமை இரவு வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது ஆண் நண்பருடன் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த பெண் தனது நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்தபோது, இரண்டு வாலிபர்கள் அப்பெண்ணின் உடைகளை கிழித்து அத்து மீறலில் ஈடுபட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனை அப்பெண்ணின் நண்பர் தட்டிக்கேட்டதால் அவரை அந்த வாலிபர்கள் தாக்கியுள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். உடனே அந்த பெண் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
போலீசார் அந்த ஓட்டலுக்கு வருவதற்கு முன்பு அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பினர். இதையடுத்து போலீசார் ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதனை வைத்து 25 வயதுடைய மருத்துவ மாணவர் ராம்குமார் என்பவரையும், 27 வயதுடைய மருத்துவர் எழிலரசு என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது போலீசார் கைது செய்தனர்.