அணைகள் விவகாரம்... டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!

Dams issue .. Minister Duraimurugan goes to Delhi!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டியுள்ளது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால் தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிப்படைவார்கள் ஏன் அச்சம் எழுவதால் இதுகுறித்து 'நடுவர் மன்றம்' அமைக்க வேண்டும் என்பதனைதமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்த நிலையில், கர்நாடக முதல்வர் எழுதிய கடிதத்திற்கு நேற்று (04.07.2021) தமிழ்நாடு முதல்வர் பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில், ''மேகதாது அணைகட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும்'' என வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார். காவிரி உள்ளிட்ட விவகாரங்கள்தொடர்பாக மத்திய அரசிடம் பேச அவர் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்துடன் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.காவிரி நீர், மேகதாது அணை விவகாரம், தென்பெண்ணை குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை ஆகியன பற்றி மத்திய அரசுடன் பேச இருக்கிறார். அதேபோல் கேரளா, ஆந்திராவுடனானநதிநீர் விவகாரங்கள் குறித்தும் பேசப்படாத இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Central Government duraimurgan
இதையும் படியுங்கள்
Subscribe