சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்கள்... தலைமறைவானவர்களைத் தேடும் காவல்துறையினர்!

Damaged maize crops ... Police search for missing persons

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ளது தச்சூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன்(85). இவர் தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். நேற்று காலை மக்காச்சோள பயிர்களுக்கு மருந்து தெளிப்பதற்காகத் தகுந்த ஏற்பாடுகள் செய்வதற்காக நிலத்திற்குச் சென்றார். அவர்கள் நிலத்தில் விளைந்திருந்த மக்காச் சோளப் பயிர்கள் சேதம் அடைந்து கிடந்தது. விளைந்த பயிர்களை யாரோ டிராக்டர் மூலம் உழுது நாசம் செய்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வரதராஜன் ராமநத்தம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்தனர். மக்காச்சோளம் விளையும்போது வரதராஜனின் தம்பி, வரதராஜனிடம் நிலத்தில் பங்கு கேட்டு தகராறு செய்துள்ளார். இது சம்பந்தமாக ராமநத்தம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு போலீஸார் தர்மாவை அழைத்துக் கண்டித்து அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அந்த முன்விரோதம் காரணமாகத் தர்மா அவரது மனைவி அருந்தவம் இவர்களது மகன் அசோக் ஆகிய மூவரும் ஒரு டிராக்டர் மூலம் வரதராஜன் பயிர் செய்திருந்த சோளத்தை உழுது அழித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தர்மா மகன் அசோக்கை கைது செய்துள்ளனர். தர்மா அவரது மனைவி அருந்தவும் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Cuddalore police
இதையும் படியுங்கள்
Subscribe