மதுராந்தகம் அருகே மின்கம்பம் உடைந்து, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி மேல் விழுந்ததால் சிறுமி படுகாயம் அடைந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அவுரிமேடு கிராமத்தில் பாண்டியன் என்பவரது 11 வயது மகள் தனது வீட்டிற்கு எதிரே இருந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பழுதடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது விழுந்தது.
கையில் பலத்த காயம் அடைந்த சிறுமியை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பழுதடைந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை மாற்றாததே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.