Advertisment

நெல் கிடங்கில் நெல்மூட்டைகள் சேதம்... பாதுகாப்புடன் வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்...

Advertisment

குழுமூர் திறந்தவெளி நெல் கிடங்கில் நெல்மூட்டைகள் சேதமடைந்துள்ளதால், நெல் மூட்டைகளைப் பாதுகாப்புடன் வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஞானமூர்த்தி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், செந்துறை ஒன்றியம், குழுமூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு குழுமூர், வஞ்சினபுரம், சன்னாசி நல்லூர், தளவாய், அயன்தத்தனூர், மணபத்தூர், நக்கம்பாடி. பெரியாக்குறிச்சி, நம்மங்குணம் ஆகிய ஊராட்சிகளில் இருந்து சுமார் 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல்மூட்டைகள்(சுமார் 3,000)குழுமூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு மண்தரையில் அடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பெய்த மழையில் நீர்புகுந்து சுமார்30% சதவிகித நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து நாசமாகியுள்ளன.போதிய சிமெண்ட் தளம் இல்லாமல் மண் தறையில் மூட்டைகள் அடுக்கப்பட்டு நெல் முளைகட்டியுள்ளது.இந்த முளைகட்டிய நெல்லைத்தான் அரைத்து நியாயவிலைக்கடைகளில் ஏழை மக்களுக்கு தரமற்ற அரிசியாகஅரசு வழங்கும்.அரசு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உறிய பாதுகாப்புடன் வைக்கக் கோரியும், குழுமூரில் 2 ஏக்கரில் சிமெண்ட் களம் அமைக்கக் கோரியும் வரும் 18-8-2020 செவ்வாயன்று காலை 9 மணிக்கு குழுமூர் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தின் முன்னால் செந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

paddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe