Advertisment

நீர் நிலைகளில் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு; பொதுமக்கள் வேதனை 

Damage to ground water table due to dumping of garbage in water bodies

Advertisment

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது மண்டலம் 15 வார்டு பகுதிகளில் உள்ள குப்பைகளைச்சேகரித்து அரசு முறையான இடம் தேர்வு செய்து அதற்கான இடத்தில் குப்பை கழிவுகளை கொட்டாமல் அதற்கான இடமும் தேர்வு செய்யாமல் காட்பாடி தாராப்படுவேடு ஏரியில் எடுத்துச் சென்று கொட்டி மலைபோல் குவித்து தீட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் ஏரியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு ஏரியின் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகைமண்டலமாக காட்சியளிப்பதால் துர்நாற்றம் வீசுகின்றது.

இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாநகராட்சி கழிவுகளை கொட்டுவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்து அதற்கான இடத்தில் குப்பைகளை கொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் என அப்பகுதியில் பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.

water Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe