Skip to main content

மேட்டூர் அணை நீர்மட்டம் 51.11 அடியாக உயர்வு

Published on 04/08/2019 | Edited on 04/08/2019

 

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், நீர்மட்டம் 51.11 அடியாக உயர்ந்துள்ளது.

d


கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து பாதுகாப்பு காரணமாக தமிழகத்திற்கு காவிரில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 


மழை காரணமாக மட்டுமின்றி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்பேரிலும் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்கிறது.


ஆகஸ்ட் 2ம் தேதி வினாடிக்கு 8 அயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, ஆக. 3ம் தேதி (சனிக்கிழமை) காலையில் 7 ஆயிரம் கன அடியாக குறைந்தது. எனினும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, தொடர்ந்து 12வது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 


இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று நீர் வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஆக. 3ம் தேதி காலை, வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் பயன்பாட்டுக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 


நீர் திறப்பைக் காட்டிலும் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை (ஆக. 2) அன்று அணையின் நீர்மட்டம் 50.15 அடியாக இருந்த நிலையில், இன்று 51.11 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 18.51 டிஎம்சி ஆக உள்ளது.

சார்ந்த செய்திகள்