Advertisment

மர அறுவை ஆலை தொழிலாளி கொலை; மூன்று பேர் கைது!

Daily wages person passes away in salem police arrested three

சேலம் பெரிய கொல்லப்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (41). இவர் மர அறுவை ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி விமலா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ரஞ்சித்குமார் மனைவியைப்பிரிந்து தாயாருடன் வசித்து வந்தார்.

Advertisment

கடந்த ஜூன் 30 ஆம் தேதி கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு மர அறுவை ஆலையில் ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கன்னங்குறிச்சி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கோரிமேடு பகுதியைச் சேர்ந்த கோகுல் என்கிற கோகுல்நாத் (24), கோபிநாத், பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் (35) ஆகியோர்தான் ரஞ்சித்குமாரை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

Advertisment

இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. கோகுல்நாத் மாமியாருக்கு ரஞ்சித்குமார் கடன் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது கோகுல்நாத் அவருடன் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் தனது கூட்டாளிகள் கோபிநாத், வெங்கடேசன் ஆகியோர் உதவியுடன் ரஞ்சித்குமாரை மர அறுவை ஆலையில் வைத்து வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கைதான மூவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe