Advertisment

கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை; நான்கு பேருக்கு போலீஸ் வலை

Daily wages person passed away near trichy

Advertisment

திருச்சி திருவெறும்பூர் பனையக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெயபால். கூலித் தொழிலான இவர், அதிகம் மது அருந்தும் பழக்கமுடையவர் என கூறப்படுகிறது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தளபதி, ஹரி, மாசி, சுந்தர் ரகு ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை ஜெயபால், வழக்கம் போல் மது போதையில் தனது வீட்டருகே நின்று கொண்டு ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சுந்தர் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் தட்டி கேட்டுள்ளனர். அப்போது ஜெயபால், தான் வைத்திருந்த கத்தியால் அவர்களை வெட்ட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், ஜெயபாலை ஓட ஓட விரட்டி இடுப்பு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த எஸ்.பி. சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் லில்லி மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe