ADVERTISEMENT

'தினசரி வேண்டாம்'-மதுரை காவல்துறை எச்சரிக்கை! 

06:51 PM May 14, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக இருக்கும் நிலையில் தமிழக அரசு சார்பில் கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. இருப்பினும் மற்ற நேரங்களிலும் மக்கள் அதிகமாக நடமாடி வருகின்றனர். தமிழக அரசு சார்பாக நேற்று தமிழக டிஜிபி இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது மதுரை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் யாரும் பொருட்கள் வாங்க தினசரி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், விநியோக சேவைகளை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும். பலசரக்கு மற்றும் காய்கறிகளை அருகில் உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். தனிநபர் இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT