/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a2449_0.jpg)
திண்டிவனம் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட்தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் படித்த இந்துமதி என்ற மாணவி பொதுத் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 520 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வில் 370 மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத நிலையில் இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்காகபயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட திமுகவின் நீட் ரகசிய அரசியல் நாடகம் குறித்து நான் பேசிய நிலையில், நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில், ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர்களுக்கு விடியா திமுக அந்த நீட் ரகசியத்தை சொல்லாமல், ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
அந்த நீட் ரகசியத்தை #Daddy_son உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், திமுக பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்' எனதெரிவித்துள்ளார்.
Follow Us