Skip to main content

தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

dadasaheb phalke award 2020 ANNOUNCED

 

தமிழ் உள்பட தென்னிந்திய சினிமாவுக்கான 2020-ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா குழு அறிவித்துள்ளதன்படி, தமிழ் மொழிக்கான விருது பட்டியலில் ‘அசுரன்’ படத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘ராட்சசி’ படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு சிறந்த இயக்குனருக்கான தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

dadasaheb phalke award 2020 ANNOUNCED

 

மேலும், பன்முகத்தன்மை வாய்ந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கும், சிறந்த படத்திற்கான விருதுக்கு 'TO LET' படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நடிகர்கள் மோகன்லால், நாகார்ஜுனா உள்ளிட்டோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் தனுஷின் மகனுக்கு அபராதம் 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 Actor Dhanush's son fined

 

பிரபல நடிகர் தனுஷின் மகன் வாகன விதிகளை மீறியதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

 

பிரபல நடிகர் தனுஷின் மூத்த மகன் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக நடிகர் தனுஷின் மகனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. தனுஷின் மூத்த மகன் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி பயணிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்த நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தனுஷின் மூத்த மகன் 17 வயது சிறுவன் என்ற நிலையில், சிறுவனாக இருசக்கர வாகனத்தை இயக்கியதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

 நடிகர் அஜித் வீட்டின் தடுப்புச்சுவர் முற்றிலுமாக இடிப்பு

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

Actor Ajith house barrier completely demolished

 

சென்னையில் நடிகர் அஜித் வசித்து வரும் ஈஞ்சம்பாக்கம் வீட்டின் முகப்பு மற்றும் தடுப்புச் சுவரை நெடுஞ்சாலைத் துறை இடித்துள்ளது. 

 

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில்  சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  அக்கரை முதல் ஈஞ்சம்பாக்கம் வரை உள்ள நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிறிது தூரம் சாலை விரிவாக்கத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

அதில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் நடிகர் அஜீத் வசித்து வரும்  வீட்டின் முன்பு உள்ள முகப்பு மற்றும் தடுப்புச் சுவர் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிக்காக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் மதில் சுவர்கள் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நெடுஞ்சாலைத் துறை தரப்பிலிருந்து சுவர்கள் இடிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு நெடுஞ்சாலைத்துறை தரப்பிலிருந்து புதியதாகத்  தடுப்புச் சுவர் கட்டி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்