கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவரும்பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துவருவதாகசெய்திகள் வெளியாகிவரும் நிலையில்,தனது தந்தை எஸ்.பி.பி பேச முயற்சிப்பதாகவும்,இசையைக் கேட்பதாகவும் அவரது மகன் சரண் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார். அதேபோல்நுரையீரல் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்புதருவதாகவும்தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பியின் உடல்நிலையில் தொடர்ந்துமுன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகமருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்.பி.பிக்கு எக்மோமற்றும் வென்டிலேட்டர் உதவியுடன்சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்துள்ளது.