Published on 26/08/2020 | Edited on 26/08/2020

கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், தனது தந்தை எஸ்.பி.பி பேச முயற்சிப்பதாகவும், இசையைக் கேட்பதாகவும் அவரது மகன் சரண் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார். அதேபோல் நுரையீரல் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பியின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்.பி.பிக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.