Advertisment

‘குற்றவாளிகளே குற்றம் சுமத்தக் கூடாது’ - திருமாவளவனுக்கு ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் ஆதரவு!

DAA for VCK At Chennai high court

‘குற்றவாளிகளே குற்றம் சுமத்தக் கூடாது’ என ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாக பா.ஜ.க உட்பட பல இந்து முன்னணி அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

Advertisment

அதேசமயம் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றன. அந்தவகையில் ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று சென்னை உயர் நீதிமன்ற ஆவின் பாலகம் அருகே 'குற்றவாளிகளே குற்றம் சுமத்தக் கூடாது' எனக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், வி.சி.க தலைவர் திருமாவளவன் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். மதவெறி சாதி வெறி சக்திகளை கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் மதவாத, சாதியவாத ஆதிக்க சக்திகள் மக்களைப் பிளவு படுத்துவதை, திசை திருப்புவதை அனுமதிக்கமாட்டோம். ஜனநாயக, முற்போக்கு சக்திகள் குரல் எழுப்புவோம் எனக் கோஷங்களை எழுப்பினர்.

thol thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe