Published on 07/07/2022 | Edited on 07/07/2022

உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் பூரண குணமடைந்துள்ளார்.
திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வயிற்றில் லேசான ரத்த கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட டி.ராஜேந்தர் தற்போது பூரண குணமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். ஒரு மாதம் அமெரிக்காவிலேயே தங்கி ஓய்வெடுக்க தேவையான வசதிகளை செய்து கொடுத்துவிட்டு, நடிகர் சிலம்பரசன் சென்னை திரும்பி படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.