Cylinders floated in the lake - stir near Tiruvannamalai

திருவண்ணாமலையில் சமையல் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் ஏரியில் உருண்டு சென்று மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள மோரணம் பகுதியில் ஏரிக்கரை ஒட்டிய சாலை பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர் திசையில் வந்த மற்றொரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக லாரி ஓட்டுநர் முயன்ற பொழுது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஏரிக்கரை அருகே கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் தப்பினார். லாரியில் அடுக்கப்பட்டு இருந்த சிலிண்டர்கள் ஏரியில் விழுந்து மிதந்தன. பின்னர் அங்கு வந்த ஊழியர்கள் சிலிண்டர்களை ஏரியில் இருந்து அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.