அரியலூர் மாவட்டம் திருமானூரில் சிலிண்டர் உயர்வைக் கண்டித்து பெண்கள் விறகடுப்பில் சமையல் செய்யும் போராட்டம் நடைபெற்றது.

இதில் சிலிண்டர் விலை உயர்வைத் திரும்ப பெற வேண்டும் என்ற கோஷத்தினை எழுப்பினர். சிலிண்டர் விலை உயர்வால் நடுத்தர குடும்ப பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், மத்திய,மாநில அரசுகள் விலை உயர்வை திரும்ப பெற்று நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரச் சுமையை போக்க வேண்டும். இந்த விலை உயர்வால் விலைவாசி உயரக்கூடும் இதனால் நாங்கள் தான் பாதிக்கப்படுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

Cylinder price rise; Women cook in firewood oven !

Advertisment

இதேநிலை நீடிக்குமானால் பழையபடி விறகடுப்பை பயன்படுத்த வேண்டிய நிலை வரும் என்பதனை உணர்த்தவே விறகடுப்பில் சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினர். இப்போராட்டத்தில் மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள், காங்கிரஸ் மூத்த நிர்வாகி சிவானந்தம், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சேவை சங்க தலைவர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Advertisment