Advertisment

விண்ணை முட்டும் சிலிண்டர் விலை; ரூ.900-ஐ தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி!

jhk

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ. 25 அதிகரித்துத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு எரிவாய சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், ஒரு மாதம் கூட முழுமையாக ஆகாத நிலையில் தற்போது மத்திய அரசு மீண்டும் விலையை உயர்த்தியுள்ளது.

Advertisment

இதன்மூலம் முன் எப்போதும் இல்லாத வகையில் சிலிண்டர் விலை ரூ.900ஐ தாண்டியுள்ளது. தற்போது மக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் விலை 900.50 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.75 உயர்ந்து ரூ. 1,831 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த 9 மாதங்களில் ரூ.285 உயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

gas cylinder
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe