Cylinder price issue women demand to government to reduce price

Advertisment

வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையேற்றத்தைக் கண்டித்து, மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை, நாளுக்கு நாள் மத்திய அரசு உயர்த்திவருகிறது. நினைத்துப் பார்க்கமுடியாத அளவில் அடிக்கடி விலையை ஏற்றியபடியே இருக்கிறது என மத்திய அரசைக்கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட மாதர் சங்க அமைப்பினர் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Cylinder price issue women demand to government to reduce price

Advertisment

அதன் ஒருபகுதியாக, திருவாரூர் மாவட்டம்,கோட்டூரில் உள்ள கடைவீதிஒன்றில்,இந்திய தேசிய மாதர் சம்மேளத்தின் பெண்கள் கூடி, சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஓப்பாரி வைத்து மத்திய மாநில அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

ஒப்பாரி ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுஉடனடியாக சிலிண்டர் விலையைக் குறைக்கவில்லையெனில், இந்திய மாதர் சம்மேளனத்தின் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.