திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி சந்தைப்பேட்டைத்தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர்(49). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகச் சமையல் எண்ணெய் தீப்பற்றி எரிந்து காஸ் சிலிண்டர் மீது தெளித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த குடும்பத்தினர் தீயை அணைக்க முயன்ற நிலையில் வெகுநேரம் போராடியும் முடியாததால் துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு சிலிண்டர் வெடித்துச் சிதறியது.சிலிண்டர் வெடித்து சிதறியதால்வீடு அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.