Cylinder burst at two different places and 8 people were injured in the accident

சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் பகுதியில் மாணிக்கம் என்பவர் குடும்பத்துடன் வசித்துவந்த நிலையில் இன்று திடீரென சமையல் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒருமாத குழந்தை, அவரது மனைவி, மகள் என மொத்தம் 7 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தது. விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் தோப்புப்பட்டியில் உள்ள குச்சிசாமியார் ஜீவசமாதி சித்தர் பீடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. அங்குள்ள சமையல் கூடத்திலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட கோளாறால் தீப்பற்றியதில் அங்கிருந்த சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் ஜீவசமாதியின் காப்பாளர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.