Cylinder burst accident in tea shop; Bustle in Cuddalore

கடலூரில் டீக்கடையில் சிலிண்டர் கேஸ் வெடித்து ஐந்து பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பூமார்க்கெட் பகுதியில் 'ஸ்ரீ கணபதி' என்ற பெயரில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று மாலை தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்குவதற்காக பூமார்க்கெட் பகுதியில் மக்கள் குவிந்ததால் கூட்டம் அதிகமாக இருந்து. இந்நிலையில் அந்த டீக்கடையில் பலர் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கடையிலிருந்த சிலிண்டர் அதிக அழுத்தம் காரணமாக வெடித்துச்சிறியது. இதில் கடையில் வேலை செய்த ஊழியர் உள்ளிட்ட ஐந்து பேர் தீக்காயத்துடன் படுகாயமடைந்த நிலையில் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment