Advertisment

புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை!

cyclone heavy rains agricultural land union government committee arrives tamilnadu

'நிவர்' புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை (05/12/2020) மதியம் 01.00 மணிக்கு சென்னை வருகிறது. டிசம்பர் 8- ஆம் தேதி வரை தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்கிறது மத்திய குழு.

Advertisment

நாளை (05/12/2020) மதியம் 03.30 மணிக்கு சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் மத்திய குழு, டிசம்பர் 6- ஆம் தேதி காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஆய்வு செய்கிறது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7- ஆம் தேதி வேலூர், திருப்பத்தூரில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை புயல் சேதங்களை ஆய்வு செய்கிறது.

Advertisment

cyclone heavy rains agricultural land union government committee arrives tamilnadu

டிசம்பர் 8- ஆம் தேதி சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி திரும்பும் மத்திய குழு புயல் சேதங்களை கணக்கீட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும். தமிழகம் வரும் மத்திய குழு புதுச்சேரி மாநிலத்திற்கும் சென்று புயல் சேதங்களை ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Puducherry union committee cyclone Tamilnadu heavy rains
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe