jk

தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள 17 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை காலை 'புரெவி' புயலாக வலுப்பெற உள்ளது. நாளை மாலை இலங்கையின் திரிகோணமலைப் பகுதியைப் புயல் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, டிச. 4 -ஆம் தேதி அதிகாலை 'கன்னியாகுமரி - பாம்பன்' இடையே புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதனால் தென் மாவட்ட மக்கள் அடுத்த மூன்று தினங்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள 17 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் 8 தேசிய பேரிடர் மீட்புக் குழுவும், புதுவையில் ஒரு பேரிடர் மீட்புக் குழுவும் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.