தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடற்பயிற்சி மீது தீவிர காதல் உடையவர். முதல்வராக இல்லாத நேரத்திலும், தற்போது முதல்வராக பணியாற்றிவருகிற சூழலிலும் அவர் காலை நடைப்பயிற்சி, மாலை உடற்பயிற்சி என்பதை மட்டும் தொடர்ந்து செய்துவருகிறார். தேர்தல் சமயங்களில் கூட அவர் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் காலை நடைப்பயிற்சியை விடாமல் செய்துவந்தார். சில நேரங்களில் வாக்கிங் போகும் இடங்களிலேயே தன்னுடைய காலை பரப்புரையைத் தொடங்கிய சம்பவங்களும் கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் நடைபெற்றது. அதேபோல், அவ்வப்போது சைக்கிளிங் செய்வதும் வழக்கம். அந்தவகையில் இன்று (25.09.2021) காலை இ.சி.ஆர். சாலையில் தமிழ்நாடு முதல்வர் சைக்கிள் பயணம் செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
இ.சி.ஆர். சாலையில் சைக்கிளிங்.. முதல்வரின் வைரல் படங்கள்!
Advertisment