பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை கண்டித்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், எய்ம்ஸ் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு நல அமைப்பின் சார்பில் மெகா சைக்கிள் பேரணி நாளை நடைபெறுகிறது.
அடையாறு துணைக்கமிஷனர் ரோகித் நாதன், அம்பத்துார் துணைக்கமிஷனர் சர்வேஸ்ராஜ் ஆகியோர் தலைமையில் நாளை (6.5.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு இந்த பேரணி தொடங்கி நடைபெறுகிறது.