/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lo434.jpg)
சென்னை தாம்பரம் அருகே சைக்கிளில் சென்ற முதியவர் மீது லோடு வாகனம் மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பரணிபுத்தூர் சாலையில் ஐயாத்துரை என்பவர், தனது சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, லோடு வாகனம் அவரை கடக்க முயன்ற போது, சைக்கிள் மீது மோதியதால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட முதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பைபாஸ் சாலையில் மின் வசதிகள் இல்லாததால் நாள்தோறும் விபத்துகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டினர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)