Karur student  case... Cyber ​​crime!

அண்மையில், கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கரூரில் ஒரு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கரூர் வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளியில் படித்துவந்த 12ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று (19.11.2021) பள்ளி சென்று மாலை வீடு திரும்பிய நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாக வெங்கமேடு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர். கோவை சம்பவத்தைப் போலவே இந்த மாணவியும் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகதற்கொலை செய்துகொண்ட மாணவி எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் 'பாலியல் தொல்லையால் உயிரிழந்த கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும். யார் இந்த முடிவ எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisment

Karur student  case... Cyber ​​crime!

இந்நிலையில், இந்த விவகாரத்தை சைபர் கிரைம் போலீசார் கையிலெடுத்துள்ளனர். கரூர் காவல்துறையினர் 124 என்ற சந்தேகத்திற்குரிய மரணம் என்று வழக்குப் பதிவுசெய்திருந்த நிலையில், மாணவி எழுதிய கடிதம் இச்சம்பவத்தின் பாதையை மாற்றியுள்ளது. தற்போது சிறுமி பயன்படுத்திய செல்ஃபோனைக் கைப்பற்றியுள்ள போலீசார், சிறுமியின் மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்புகள், மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்துவருகின்றனர். அப்படி சேகரிக்கப்படும் ஆதாரத்தின் அடிப்படையில்தான் இந்த வழக்கு நகரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்ஃபோனை அதிகம் பயன்படுத்தக் கூடாது என சிறுமியின் பெற்றோர்கள் திட்டியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.