cyber crime registered Case V.C.K.   leader Thirumavalavan  under six sections

Advertisment

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பா.ஜ.க கட்சியின்வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர்அஸ்வத்தாமன்நேற்று ஆன்லைன் மூலமாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் "விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன், பெண்களைக் குறித்து அவதூறாகப் பேசுவதாகவும்,இந்து சாஸ்திரங்களில் இதுபோன்ற கருத்து உள்ளதாகவும்பொய்யாகப் பேசி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாரை ஏற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், வி.சி.க. தலைவர் திருமாவளவின் மீது 153,153 a, 295a, 298, 505(1), 505 (2) என ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.