Advertisment

ஆன்லைன் மோசடியில் பெண் பறிகொடுத்த பணம் மீட்பு

cyber crime Police recovered money stolen woman online fraud

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு(26). படித்த பட்டதாரியான இவர் இணையதளத்தில் வேலை தேடி உள்ளார். அதில் வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்து ஒரு இணையதளத்தில் பதிவும் செய்துள்ளார்.அஞ்சுவின் இணையதள முகவரியை தொடர்பு கொண்டவர்கள், கடந்த மே மாதம் 5ஆம் தேதி அவர் செல்போனுக்கு பேசியுள்ளனர். அப்போது அஞ்சுவிற்கு வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அவர்கள் கூறியபடி அதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்காக முன்பணமாக பல்வேறு தவணைகளில் ரூ. 2 லட்சத்தை கூகுள் பே மூலம்அஞ்சுவிடமிருந்து பெற்றுள்ளனர். ஆனால் இவர் வேலை செய்வதற்கான சம்பளம் தரப்படவில்லை. இவர் முன்பணமாக கட்டிய ரூ. 2 லட்சம் பணத்தையும் திருப்பி தரவில்லை.

Advertisment

இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஞ்சு, விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.இவரது புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இணைய விசாரணை மூலம் அஞ்சு பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை முடக்கம் செய்து, அதிலிருந்து ரூ.2 லட்சம் பணத்தை மீட்டனர். பின்னர் அந்தப்பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் க்ரைம் பிரிவு போலீசார் அஞ்சுவை நேரில் அலுவலகத்திற்கு வரவழைத்து அவரது பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர். மோசடியில் பறிகொடுத்த பணத்தை கடும் முயற்சி செய்து மீட்டுக் கொடுத்த சைபர் க்ரைம் பிரிவு போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe