Advertisment

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உருவப்படம் எரிப்பு

cv shanmugam aiadmk

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்த்தில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், திமுக தலைவர் கலைஞர் மற்றும் எதிர்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து பேசியிருந்தார். அவருக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்த நிலையில அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலவயல் சுப்பையா மற்றும் அவரது மகன் திருமயம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் ஆகியோர் பொன்னமராவதியில் சி.வி.சண்முகத்தின் உருவப்படத்தை எரித்தும், குப்பை வண்டியில் படத்தை ஒட்டி செருப்பு மாலை அணிவித்தும் கண்டனம் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment
protest cmk minister aiadmk CV Shanmugam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe