Advertisment

சி.வி. சண்முகம் கொலை முயற்சி வழக்கு; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

cv-shanmugam


அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தைக் கொலை செய்ய முயன்ற  நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், அவரை வெட்டி படுகொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சியில் நல்வாய்ப்பாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உயிர் தப்பினார்.

இருப்பினும் அவரது கார் ஓட்டுநர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தவழக்கில் 20 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில்  திண்டிவனம் நீதிமன்றம் இன்று (25.06.2025) தீர்ப்பளித்துள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 5 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 15 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முகமது பாரூக் உத்தரவிட்டுள்ளார்.

admk CV Shanmugam politics
இதையும் படியுங்கள்
Subscribe