
சென்னை மெரினா கடற்கரையில் திருமண போட்டோ ஷூட்டிற்காக வந்திருந்த புகைப்பட கலைஞரை மூன்று சிறுவர்கள் பட்டாக்கத்தியால் வெட்டிய வீடியோ காட்சிகள் வைரலாகி இருந்த நிலையில் அது தொடர்பாக மூன்று சிறுவர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
திருமுல்லைவாயிலை சேர்ந்த இளமாறன் என்ற இளைஞர் அவருடைய நண்பரின் திருமணத்திற்காக போட்டோ ஷூட் நடத்துவதற்காக நண்பர்களுடன் சேர்ந்துசென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். 'நம்ம சென்னை' செல்ஃபி பாயிண்ட்டுக்கு வந்த இளமாறன் அவரது நண்பர்களுடன் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்து பட்டாக்கத்திகளுடன் வந்த சிறுவர்கள் சிலர் அவரின் செல்போனை கேட்டு மிரட்டல் விட்டனர். ஆனால் இளமாறன் செல்போனை தராத நிலையில், சிறுவர்கள் கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியால் அவரை தாக்கம் முயன்றனர். இதில் இளமாறனின் இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தை அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நிலையில், இது தொடர்பாக நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவனையும், மூன்று சிறுவர்களையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Follow Us